Translate

Sunday, 24 November 2013

நிசான் வழியில் புதிய பட்ஜெட் பிராண்ட்: ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

நிசான் வழியில் புதிய பட்ஜெட் பிராண்ட்: ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

அடுத்த ஆண்டு புதிய பட்ஜெட் பிராண்டில் கார்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய உள்ளது.

டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வருவது போன்றே, அதே வழியை பின்பற்றி தற்போது ஃபோக்ஸ்வேகனும் புதிய பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளது.

 
டோக்கியோ மோட்டார் ஷோவில் கலந்து கொண்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உயரதிகாரி ஹெயின்ஸ் ஜேக்கப் நூசர் இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த புதிய பிராண்டில் வெளியிடப்படும் கார்கள் மற்றும் இதர அம்சங்கள் குறித்து தற்போது தீவிர ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அடுத்த 12 மாதங்களில் புதிய பிராண்டு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட் பிராண்டாக இருந்தாலும், தரம் மற்றும் இதர அம்சங்களில் குறைவில்லாமல் கார்களை அறிமுகம் செய்யப்படும். ஃபோக்ஸ்வேகன் பிராண்டிலிருந்து வாடிக்கைாயளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை நிறைவேற்றும் வகையில் புதிய பிராண்டு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய கார்கள் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் புதிய பிராண்டில் கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய பிராண்டில் வரும் கார்கள் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment