Translate

Friday, 29 November 2013

வை பை பிரச்சனைகளை சரிசெய்ய...!

வை பை பிரச்சனைகளை சரிசெய்ய...!

இன்று வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பை இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது.

ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது.

இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன.

சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

லேப்டாப்பில் உள்ள வை-பை பட்டன்:

காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பை இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும்.

உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பை பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.

கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்:

வை-பை பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும்.

இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும்.

அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும்.

இதனை "power cycling" வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

No comments:

Post a Comment