யு.பி.எஸ்.சி.,யின் விவசாய தேர்வு
இந்தியாவின் மத்திய அமைச்சக மற்றும் முக்கிய அரசுப் பணி இடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., தேர்வுக் குழுமம் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.
இந்த அமைப்பின் சார்பாக கிரேடு 3 டெக்னிகல் அஸிஸ்டெண்ட் - பிரிவு 'சி'- சப்-ஆர்டினேட் அக்ரிகல்சர் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. மொத்தம் 6628 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்வில் 3616 இடங்கள் பொதுப் பிரிவுக்கும், 2211 இடங்கள் எஸ்.சி. பிரிவுக்கும், 235 இடங்கள் எஸ்.டி., பிரிவுக்கும், 566 இடங்கள் ஓ.பி.சி., பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது : 01.07.2013 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக விவசாயப் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: யு.பி.எஸ்.சி., நடத்தும் பொது எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/-ஐ தேர்வுக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கியிலோ நிபந்தனைகளின்படி செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 21.11.2013
முழு விபரங்களை அறிய பார்க்கவேண்டிய இணையதள முகவரி : http://upsc.org.in/
No comments:
Post a Comment