உலகின் அதிபயங்கர மரணச் சாலையில் ஓர் திக் திக் பயணம்... கத்தரி போடாத வீடியோ!
டெத் ஹைவே
லா பாஸ் மற்றும் கொராய்கோ பகுதிகளை 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மரணச் சாலை இணைக்கிறது.
மோசமான பகுதி
இந்த சாலையின் இடையிலான 3,600 மீட்டர் நீளத்துக்கான சாலை மிக மிக மோசமானதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பகுதியில் விழுந்த வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது என்கின்றனர்.
புள்ளிவிபரம்
இந்த பாதையில் ஆண்டுக்கு சராசரியாக 26 வாகனங்கள் பாதாளத்தில் உருண்டு விபத்துக்குள்ளாவதாகவும், ஆண்டுக்கு 100 பேர் மாண்டுவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பு
1995ம் ஆண்டில் அமெரிக்க மேம்பாட்டு வங்கி இந்த சாலையை உலகின் அதிபயங்கர மரணச் சாலையாக அறிவித்தது.
சாகச பிரியர்கள்
இந்த சாலையில் இருக்கும் அபாயங்கள், உயிரிழப்புகளை பொருட்படுத்தாது, இந்த சாலையில் பயணிக்க உலகம் முழுவதும் இருந்து சாகச பிரியர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிபயங்கரமான சாலைகளில் மிக மோசமானதாக பொலிவியா நாட்டில் உள்ள டெத் ஹைவே வர்ணிக்கப்படுகிறது. பிரபல டாப் கியர் ஆட்டோமொபைல் இதழின் குழுவினர் இந்த சாலையில் பயணித்து வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டனர்.
மிரள வைத்த அந்த வீடியோ தொகுப்பை விஞ்சும் வகையில் தற்போது அந்த பாதையில் சென்ற மற்றொரு குழுவினர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கத்தரி போடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.
No comments:
Post a Comment