ஸ்கோடா ரேபிட்டுக்கு வட்டியில்லா கடன் திட்டம் அறிவிப்பு
வட்டியில்லா கடன் திட்டத்தில் ரேபிட் காருக்கான சிறப்பு திட்டத்தை ஸ்கோடா அறிவித்துள்ளது.
ஸ்கோடாவின் வெற்றிகரமான செடான் காரான ரேபிட்டுக்கு அவ்வப்போது சிறப்பு கடன் திட்டங்களை ஸ்கோடா அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஆண்டு கடைசி நெருங்குவதையொட்டி சிறப்பு கடன் திட்டத்தை ரேபிட் காருக்கு அறிவித்துள்ளது ஸ்கோடா.
இந்த வட்டியில்லா சிறப்பு கடன் திட்டத்தில் மாதம் ரூ.17,167 வீதம் 36 மாதங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பணம் மற்றும் இந்த சிறப்பு கடன் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை அருகிலுள்ள ஸ்கோடா டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment