ஜவகர்லால் நேரு பிறந்த இடம் இன்று பிரபல சிகப்பு விளக்குப் பகுதி! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த இடம் இன்று பிரபல சிகப்பு விளக்குப் பகுதி என்று சொன்னால் நம்பவா முடிகிறது? ஆனால் சில உண்மைகள் கசக்கவே செய்யும்.
ஆம்! அலகாபாதில் உள்ள மீர்கஞ்சில்தான் நேரு பிறந்தார். ஆனால் அந்த இடம்தான் இன்று இந்தியாவின் சதை வியாபரத்தில் நம்பர் 1.
நேரு ஏதோ வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தார் என்ற கதைகளுக்கு மாறாக மோதிலால் நேரு என்ற தட்டுத் தடுமாறிய வழக்கறிஞருக்கு வாடகை வீட்டில் பிறந்தவர்தான் ஜவகர்லால் நேரு.
உயர்நீதிமன்றம் ஆக்ராவிலிருந்து அலகாபாதிற்கு மாற்றப்பட்ட பிறகு நேரு குடும்பம் கொஞ்சம் பணக்கார இடத்திற்கு குடி போனது. இதற்கு முன்னர் வாடகை வீடு என்றே கூறப்படுகிறது.
இப்போது ஜவகர்லால் நேரு பிறந்த மீர்கஞ்ச்சில் முழு நேர விபச்சாரப் பகுதியாகியுள்ளது.
உள்ளூர் தலைவர்கள் பலர் இந்த நிலைமையை மாற்ற முயன்றும் முடியவில்லையாம். நேரு மீர்கஞ்சில் 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்திருப்பார். அவரது நினைவலைகளில் மீர்கஞ்ச் மற்றும் அலகாபாத் எப்போதும் இருந்ததாகவே அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் இன்று புகழ்பெற்ற சிகப்பு விளக்குப் பகுதியாகும் அது. உள்ளூர் பெண்கள் தவிர, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இங்கு பெண்கள் சதை வியாபரத்திற்காக அழைத்து வரப்படுகின்றனர். நேபாளம், மற்றும் வங்கதேசப் பெண்களும் உண்டாம்.
வாய் கிழிய காங்கிரஸ் வரலாறு பேசும் இப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
No comments:
Post a Comment