Translate

Friday, 15 November 2013

பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விபரங்கள் வெளியீடு

பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விபரங்கள் வெளியீடு

உற்பத்தி
கடைசி பதிப்பில் 350 முதல் 500 கார்களை மட்டுமே விற்பனை செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதில், எத்தனை கன்வெர்ட்டிபிள் மற்றும் கல்விங் கதவுகள் கொண்ட மாடல்கள் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்ட்டிருக்கும் இந்த கார் 583 எச்பி ஆற்றலையும், 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஜிடி மாடலுக்கும் இதே எஞ்சின்தான் உயிர் கொடுக்கும்.

சிறப்பு ஆக்சஸெரீஸ்
கார்பன் ஃபைபர் ஹூட், ரியர் விங், முன்பக்கம் கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர்கள், ஓஆர்விஎம் கண்ணாடிகள், புதிய பிரேக்குகள், புதிய பம்பர் மற்றும் கரும் பூச்சு பின்புலம் கொண்ட ஹெட்லைட்டுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

பதிலி மாடல்
எஸ்எல்எஸ் ஏஎம்ஜி விட்டுச் செல்லும் இடத்தை நிரப்புவதற்கு புதிய மாடலை பென்ஸ் தயார் செய்து வருகிறது. சி190 என்ற குறியீட்டு பெயரில் வரும் இந்த கார் எஸ்எல்சி ஏஎம்ஜி என்ற பெயரில் பதிலி மாடலாக வருகிறது. போர்ஷே 911 டர்போ காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவுக்கு முன்னதாகவே பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் கடைசி பதிப்பு காரின் படங்கள், விபரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது. நீண்ட மூக்கு அழகியான இந்த கார் அடுத்த ஆண்டுடன் மார்க்கெட்டிலிருந்து விடைபெற உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக் டீசர் வழியாக ரசிகர்களை சுண்டி இழுத்த இந்த காரின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வர இருக்கும் இந்த காரைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

No comments:

Post a Comment