Translate

Sunday, 24 November 2013

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு நவரத்தினா நிறுவனமாகும். பின் நாட்களில் இந்த நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடர்பிலான பணிகளில் ஈடுபடத் துவங்கியது.
ரேடார்கள், மிலிட்டரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட்கேஸ்டிங், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் போட்டோ வோல்டாயிக் சிஸ்டம்ஸ், எம்பெட்டடு சாப்ட்வேர், எலக்ட்ரானிக் காம்போனன்ட் என்று பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் சிறப்பு பெறுகிறது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் : எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் புரொடக்சன், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : பெல் நிறுவன பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12.12.2013 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பட்டப் படிப்பு தேவை. இந்தப் பட்டத்தை 01.01.2012க்கு பின்னர் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.11.2013
விபரங்களுக்கு : www.bel&india.com/sites/default/files/gapp Ad to corporate.pdf

No comments:

Post a Comment