Translate

Sunday, 24 November 2013

பணியில் இருப்பவருக்கு ராணுவ பணிவாய்ப்பு

பணியில் இருப்பவருக்கு ராணுவ பணிவாய்ப்பு

நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருவதை அறிவோம். இந்த படையில் அதிகாரிகளாக பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெரிடோரியல் ஆர்மி ஆபிசர்ஸ் எனப்படும் இந்தப் பதவிக்கு ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்யப்படுகிறது.
வயது : விண்ணப்பதாரர்கள் 31.12.2013 அடிப்படையில் 18 வயது முதல் 42 வயது உடையவராக இருக்கலாம்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியும் பதவிகளும் : இந்தப் பதவியில் லெப்டினண்ட், கேப்டன், மேஜர், லெப்டினண்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர் போன்ற ரேங்க் ஏதாவது ஒன்றில் பணி புரியலாம். இந்தப் பதவிக்கான கமிஷன் பெறப்பட்ட முதல் ஆண்டில் ஒரு மாத கால அடிப்படை பயிற்சி இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 2 மாத கால ஆண்டு பயிற்சி முகாம் இருக்கும். பதவியில் இணைந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் டேராடூனில் உள்ள இந்திய மிலிட்டரி அகாடமியில் 3 மாத கால பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தேர்ச்சி முறை : இந்தப் பதவிக்கு வந்து சேரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளின் கீழ் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை தொடர்புடைய குரூப் ஹெட்குவார்டர்ஸ் மையத்துக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கான முகவரி: Commander, TA Group Head quarters, Southern Command, Pune - 411001
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2013
விபரங்கள் அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://indianarmy.nic.in/writereaddata/WhatsNew/43 9/TA_Advt111113.pdf

No comments:

Post a Comment