Translate

Monday, 2 December 2013

நவம்பர் விற்பனையில் டாப் - 10 கார்களின் பட்டியல்

நவம்பர் விற்பனையில் டாப் - 10 கார்களின் பட்டியல்

ஆல்ட்டோ
சில மாதங்களுக்கு பின்னர் மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை ஓரளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த மாதம் 23,024 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. வழக்கம்போல் மாருதிக்கு ஆல்ட்டோ காரின் விற்பனை ஓரளவு கைகொடுத்துள்ளது.

ஸ்விஃப்ட்
ஸ்விஃப்ட் காரின் விற்பனை நவம்பரில் சரிந்தது. அக்டோபர் மாதத்தில் 19,47 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 15,734 கார்கள் விற்பனையாகியது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

டிசையர்
டிசையர் விற்பனையிலும் சற்று சரிவு ஏற்பட்டது. அக்டோபரில் 17,211 டிசையர் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 15,286 கார்கள் விற்பனையாகின.

வேகன் ஆர்
வழக்கம்போல் வேகன் ஆர் கார் நான்காம் இடத்தை பிடித்தது. அக்டோபரில் 14,270 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 12,815 கார்கள் மட்டுமே விற்பனையானது.

கிராண்ட் ஐ10
ஹூண்டாய் எதிர்பார்ப்பை மிக சரியாக பூர்த்தி செய்து வருகிறது செப்டம்பரில் விற்பனைக்கு வந்த கிராண்ட் ஐ10. விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் கிராண்ட் ஐ10 கார் கடந்த மாதமும் 5வது இடத்தை பிடித்தது. கடந்த அக்டோபரில் 11,519 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 11,007 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்தது. விற்பனையில் சிறிது கண்டாலும், கிராண்ட் ஐ10 வருகை ஹூண்டாய் நிறுவனத்துக்கு பெரும் பக்கபலமாக மாறியுள்ளது.

பொலிரோ
மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவியான பொலிரோ தொடர்ந்து மிக முக்கிய இடத்தை தக்க வைத்து வருகிறது. கிராண்ட் ஐ10 காரிடம் 5வது இடத்தை இழந்தாலும், அதற்கு அடுத்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 8,474 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்தது.

அமேஸ்
ஹோண்டா அமேஸ் கார் மார்க்கெட்டில் ஸ்திரமான இடத்தை பெற்றுள்ளது. கடந்த அக்டோபரில் 9,564 அமேஸ் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 7,598 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்தது.

இயான்
ஹூண்டாய் இயான் கார் தொடர்ந்து டாப் 10 பட்டியலுக்குள் இடம் பிடித்து வருகிறது. கடந்த மாதம் 6,340 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளது. டாப் - 10 பட்டியலில் 8ம் இடத்தை பிடித்தது.

எர்டிகா
எர்டிகா விற்பனையிலும் சற்று சரிவு ஏற்பட்டது. கடந்த அக்டோபரில் 7,224 எர்டிகா கார்கள் விற்பனையாகி 8ம் இடத்தில் இருந்த நிலையில், கடந்த மாதம் 5,840 எர்டிகா கார்கள் விற்பனையானது. கடந்த மாத நிலவரப்படி 9ம் இடத்தில் இருக்கிறது.

ஓம்னி
ஓம்னி மினி வேன் டாப் - 10 பட்டியலுக்குள் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த மாதம் 5,477 ஓம்னி மினி வேன்களை மாருதி விற்பனை செய்தது.

நிசான் டெரானோ
டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான நிசான் டெரானோவுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 2,865 டெரானோ எஸ்யூவிகளை விற்றதாக நிசான் தெரிவித்துள்ளது.

டஸ்ட்டர் vs ஸ்கார்ப்பியோ
மார்க்கெட்டில் டஸ்ட்டர், ஸ்கார்ப்பியோ இடையில் கடும் போட்டி இருந்து வருகிறது. கடந்த மாதமும் மிக நெருக்கமான விற்பனையை இரு மாடல்களும் பதிவு செய்தன. கடந்த மாதம் 3,624 டஸ்ட்டர் எஸ்யூவிகளும், 3,594 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மாடல்களும் விற்பனையாகின. மிகக் குறைந்த வித்தியாசத்துடன் இரு எஸ்யூவிகளும் போட்டி போட்டு வருகின்றன.

புத்தாண்டு தாக்கம்
புத்தாண்டு தாக்கம் மற்றும் ஆண்டு கடைசி என்பதால் கார் விற்பனையில் மந்தமான நிலை காணப்படுகிறது. இருப்பினும், சலுகைகளை தொடர்ந்து வழங்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் எதிரொலியால் கார் விற்பனையில் மாற்றங்கள் நிகழுமா என்பதை அடுத்த மாத பட்டியலில் பார்க்கலாம்.

பண்டிகை காலம் முடிந்ததன் தாக்கம் கடந்த மாதம் பிரதிபலித்தது. பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை சரிவை சந்தித்தது.

தொடர்ந்து சலுகைககள் அறிவித்தும் போதிய பலன் கிடைக்கவில்லை. ஆல்ட்டோ விற்பனை அதிகரித்த போதிலும், ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் விற்பனை அக்டோபரைவிட சரிவை சந்தித்தது.

கடந்த மாதம் டாப் 10 இடங்களை பிடித்த கார் மாடல்களையும், புதிதாக மார்க்கெட்டுக்கு வந்த நிசான் டெரானோ விற்பனை விபரத்தையும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment