2015 முதல் பைக்குகளுக்கு புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதி அமல்!
2015ம் ஆண்டு இருசக்கர வாகனங்களுக்கான புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருசக்கர வாகனங்களுக்கு புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2015ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கான புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, இருசக்கர வாகனங்களின் எஞ்சின்களில் குறைவான கார்பனை வெளியிடும் வகையில் மேம்படுத்த வேண்டியிருக்கும்.
இதுபோன்று, எஞ்சின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது அதற்கான செலவீனத்தை வாடிக்கையாளர் தலையில் வைக்க இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக சாதாரண ரக பைக்குகளின் விலை ரூ.1,500 வரையிலும், பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளின் விலை ரூ.10,000 வரையிலும் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment