Translate

Sunday, 29 December 2013

20 எம்.பி. திறனுடன் கேமரா தர சாம்சங் முயற்சி

20 எம்.பி. திறனுடன் கேமரா தர சாம்சங் முயற்சி

சாம்சங் நிறுவனம், வரும் ஆண்டின் இரண்டாவது பகுதியில், தான் வெளியிட இருக்கும் ஸ்மார்ட் போன்களில், 20 எம்.பி. திறனுடன் கூடிய கேமராக்களைத் தர முயற்சிகளை எடுத்து வருகிறது. வரக்கூடிய சாம்சங் காலக்ஸி எஸ்5 மொபைல் போனில், 16 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா கிடைக்க இருப்பதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஐஸோ செல் சென்சார் (ISOCELL Sensor) இருக்கும் எனவும் இத்தகவல்கள் கூறுகின்றன. ஆனால், குறைந்தது 5 கோடி சென்சார்கள் கிடைத்தால் தான், இவற்றுடன் மொபைல் போன்களின் வடிவமைப்பை சாம்சங் தொடங்கும் எனத் தெரிகிறது.
20 மெகா பிக்ஸெல் திறனுடன் வர இருக்கும் கேமராவில், CMOS சென்ஸார் இருக்கும் என்றும், இதனை வழங்க சோனி நிறுவனத்துடன், சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றும் தெரியப்பட்டுள்ளது

No comments:

Post a Comment