இரண்டு புதிய நோக்கியா லூமியா போன்
ஜனவரி மாதத்தின் முதல் பகுதியில், நோக்கியா இந்தியா நிறுவனம் இரண்டு புதிய லூமியா போன்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
அவை பெரிய திரை கொண்ட நோக்கியா லூமியா 1320 மற்றும் நோக்கியா லூமியா 525. இரண்டாவதாகக் கூறப்படும் லூமியா 525, ஏற்கனவே வெற்றி கரமாக விற்பனை செய்யப்பட்ட, லூமியா 520 போனின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பாகும்.
லூமியா வரிசையில், 6 அங்குல திரை கொண்ட முதல் போனாக லூமியா 1320 வெளி வருகிறது. லூமியா 525 போன், அதன் ஷெல்களை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரண்டு போன்களும் நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன.
நுகர்வோரிடையே, மொபைல் போன்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் குறிப்பிட்ட முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றின் மூலம், தொடர்ந்து தொடர்பில் இருப்பதிலும், விஷயங்கள் மட்டுமின்றி, போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்தலிலும் இவை முக்கிய இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த வகை போன்களை, நோக்கியா தன் பல்லாண்டு அனுபவத்தில், மிகத் திறமையான தொழில் நுட்பத்துடன் தந்து வருகிறது, என "நோக்கியா இந்தியா' பிரிவின் மேலாண் இயக்குநர் பாலாஜி தெரிவித்தார்.
சென்ற 2013 ஆம் ஆண்டில் நோக்கியா லூமியா போன்கள் இந்தியாவில் நல்லதொரு இடத்தைப் பிடித்தன. நோக்கியா ஒன்பது புதிய மாடல்களை வெளியிட்டது. அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதியதாக வரும் இந்த இரண்டு மாடல்களும் அதே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விண்டோஸ் போன் சிஸ்டம் கொண்ட போன்களில், நோக்கியா போன்கள் 93.2 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்தன. இவை தொடர்ந்து பல அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தியது, இவற்றின் வெற்றியைக் குறிக்கிறது.
நோக்கியா லூமியா 1320, மொபைல் போனுக்கான திறன் செறிந்த பயன்பாட்டுடன், பொழுது போக்கு அம்சங்களையும் அதிகம் கொண்டுள்ளது. இதில் நவீன கேமரா தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தாங்கள் அனுபவிக்கும் சூழ்நிலையை உடனுடக்குடன் பதிவு செய்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கூடுதல் வசதியாக, மைக்ரோசாப்ட் ஆபீஸ் இணைத்துத் தரப்படுகிறது. இதனால், எந்த நேரத்திலும் டாகுமெண்ட்களையும், பிற பைல்களையும் எடிட் செய்து, பிறருக்கு அனுப்ப முடியும்.
நோக்கியா 525, அனைவரும் வாங்கக் கூடிய விலையிலான விண்டோஸ் போன் 8 சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் மொபைல் போனாகக் கிடைக்கிறது. இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கொண்ட கேமராவும், இமேஜ் அப்ளிகேஷனும் நம் கற்பனைக்கு ஈடு கொடுக்கின்றன.
No comments:
Post a Comment