இந்தியாவில் சாம்சங் காலக்ஸி கிராண்ட் 2
இந்த வாரம் சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி கிராண்ட் 2 ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. சென்ற மாதம் இதன் சிறப்பம்சங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு, பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 5.25 அங்குல அகலத்துடன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் சப்போர்ட், 8.9 மிமீ தடிமன், 163 கிராம் எடை, எல்.இ.டி. பிளாஷ் இணைந்த, 8 எம்.பி. திறன் கொண்ட முதன்மை கேமரா, இரண்டாவதாக 2 எம்.பி. திறன் கொண்ட துணைக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1.5 ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள், 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை கிடைக்கின்றன. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் தரப்பட்டுள்ளன.
இதன் பரிமாணம் 146.8 x 75.3 x 8.9 மிமீ. எடை 163 கிராம். பார் டைப் வடிவமைப்பு கொண்ட இந்த போன் கருப்பு, இளஞ்சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும். இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது ரூ. 22,900 முதல் ரூ.24,900 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment