Translate

Sunday, 15 December 2013

தரச்சான்று நிறுவன வேலை வாய்ப்புகள்

தரச்சான்று நிறுவன வேலை வாய்ப்புகள்

ஐ.எஸ்.ஐ., என்ற தரச்சான்று நிறுவனம் பெயர் மாற்றம் கண்டு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் பி.ஐ.எஸ்., நிறுவனமாக தற்சமயம் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனம் நமது நாட்டின் தலை நகரமான புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்டு - பிரிவில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பி.ஐ.எஸ்., நிறுவன சயிண்டிஸ்ட் பதவி மெக்கானிகலில் 31, சிவில் பிரிவில் 24, மெட்டலர்ஜிகலில் 9, கெமிக்கலில் 8, எலக்ட்ரிகலில் 31, கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங்கில் 10, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்கில் 2 என்ற எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளது.
வயது : 01.12.2013 அடிப்படையில் 21 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி : தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இறுதித் தேர்வை எழுதுபவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
தேர்ச்சி முறை : டெஸ்ட் ஆப் ரீசனிங், குவாண்டிடேடிவ் ஆப்டிடியூட், இங்கிலீஷ் லாங்குவேஜ் மற்றும் துறைசார்ந்த பிரிவு ஆகியவற்றை அடக்கிய 200 கேள்விகளைக் கொண்ட ஆன்-லைன் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ரூ.750/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 24.12.2013
விபரங்களுக்கு: http://www.bis.org.in/other/RecruitmentScientist&B.htm

 

No comments:

Post a Comment