Translate

Monday, 23 December 2013

எல்.ஐ.சி., அழைக்கிறது முன்னாள் ஊழியர்களை....

எல்.ஐ.சி., அழைக்கிறது முன்னாள் ஊழியர்களை....

இன்சூரன்ஸ் என்ற வார்த்தைக்கு மறுவார்த்தையாக இந்தியா முழுமையும் அறியப்படும் எல்.ஐ.சி., நிறுவனம் பொதுத் துறை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் நிறுவன அங்கத்தினர் என்ற பல பெருமைகள் இந்த நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக எந்த பணி நியமனமும் செய்யப்படவில்லை என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். வங்கித் துறையில் பல ஆயிரக்கணக்கான பணி நியமனங்கள் தொடந்து செய்யப்பட்டு வரும் நிலையில் எல்.ஐ.சி.,யில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாறிவரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 'மினி ஆபிஸ்' கிளைகளை நிர்வகிக்க இந்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கான பணி வாய்ப்புகளை இந்த நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
என்ன பதவி ?: அசோசியேட் (மினி ஆபிஸ்) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் பதவி 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அமைகிறது. இந்தப் பதவிக்கு எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஏற்கெனவே எச்.ஜி.ஏ., ஏ.ஏ.ஓ., ஏ.ஓ., ஏ.டி.எம்., என்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் : எல்.ஐ.சி., நிறுவனம் அறிவித்துள்ள இந்த அசோசியேட் காலியிடங்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 152 உள்ளன. கேரளாவில் 45 உள்ளன.
தேவைகள் என்ன ? : மேற்கண்ட பணித் தகுதிகளுடன் எல்.ஐ.சி., நிறுவனத்தில் அலுவலகப் பணிகளில் வரையறுக்கப்படும் சில பணிகளை செய்யத் தயாராக இருக்க வேண்டும். முழுமையான விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் வயது 63க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய முன்னாள் எல்.ஐ.சி., ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை szmini@licindia.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2013
இணையதள முகவரி : www.licindia.com/careers

No comments:

Post a Comment