Translate

Sunday, 22 December 2013

பாக்ட் நிறுவனத்தில் டெக்னிகல் பணியிடங்கள்  

பாக்ட் நிறுவனத்தில் டெக்னிகல் பணியிடங்கள்
 
தி பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்பது அரசுத்துறை சார்ந்த லாபகரமாக இயங்கி வரும் பிரம்மாண்டமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள அப்ரெண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் : டெக்னீசியன் டிப்ளமோ அப்ரெண்டிஸ் பிரிவில் சிவில் அண்டு கம்ப்யூட்டர், கெமிக்கல், மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவுகளிலும், டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எம்.எம்.வி., இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், சி.ஓ.பி.ஏ., பிளம்பர், கார்பெண்டர், மெக்கானிக் டீசல் ஆகிய பிரிவுகளிலும் இந்த அப்ரெண்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள் : டெக்னீசியன் டிப்ளமோ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவுகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 01.04.2014க்கு முன்பு 3 வருட காலத்திற்குள் இந்த டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும். வயது 23க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும். பிரிவு வாரியாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை : முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Fertilisers And Chemicals Travancore Limited, (A Government Of India Enterprises) Udyogamandal - 683 501
விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.01.2014
இணையதள முகவரி : http://fact.co.in/default.aspx

No comments:

Post a Comment