Translate

Monday, 30 December 2013

தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்!!

தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்!!

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அது சாலையில் வருபவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டும் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை என்பதே நிசர்சனமான உண்மை.

நாட்டிலேயே விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதுதொடர்பாக, 'சட்டப் பஞ்சாயத்து இயக்கம்' ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை உங்கள் பார்வைக்கு விடுகிறோம்.

No comments:

Post a Comment