Translate

Sunday, 29 December 2013

செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு

செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொது மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான ஸ்டீல் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்தியாவின் பலமையங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. செய்ல் நிறுவனத்தின் பொகாரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி எஸ்-3 பதவியில் உள்ள மொத்த காலியிடங்கள் 132ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : பொகாரோ செய்ல் நிறுவனத்தில் மெக்கானிகலில் 33, எலக்ட்ரிகலில் 22, சிவிலில் 13, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5, மெட்டலர்ஜியில் 33, கெமிக்கலில் 10, செராமிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்சில் தலா 7, சர்வேயில் 2 என்ற அளவில் காலியிடங்கள் உள்ளன.
வயது : 01.12.2013 அடிப்படையில் அதிக பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்துவிட்டு, மூன்று வருட காலம் படிக்கக்கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ரூ.250/-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் SBI Power Jyoti A/c No. 31877168126 maintained by SBI sector 4, B.S.City branch), on behalf of SAIL/Bokaro Steel Plant என்றவாறு செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.01.2014
விபரங்கள் அறிய: http://sail.shine.com/media/documents/home/OTT_advt_final_

No comments:

Post a Comment