என்.சி.சி., சி சான்றிதழுக்கு ராணுவத்தில் வேலை
சர்வதேச அளவில் தனது அர்ப்பணிப்பு உணர்வு, நவீனமய ஆயுதங்கள், பிரத்யேக பயிற்சி பெற்ற வீரர்கள் ஆகியவற்றிற்காக இந்திய ராணுவம் எனப்படும் இந்தியன் ஆர்மி உலகமெங்கும் அறியப்படுகிறது. இந்தப் படையில் இணைவதை பெருமையாகக் கருதும் இளைஞர்கள் இன்றும் பெருமளவில் இருக்கிறார்கள். இந்தப் படையில் ஏற்கெனவே என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் இருந்தவர்களை குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
காலி இடங்கள்: ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 04 வயது : 02.07.1989க்கு பின்னரும் 01.07.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் டிவிஷன் என்.சி.சி.,யில் குறைந்த பட்சம் 2 வருடம் இருந்திருக்க வேண்டும். என்.சி.சி.,யின் "சி' சர்டிபிகேட் படிப்பை குறைந்த பட்சம் "பி' கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: குரூப் டெஸ்ட், சைகாலஜிக்கல் டெஸ்ட், நேர்காணல், மருத்துவ பரிசோதனை உடல் தகுதி : உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப வேண்டும்.
அனுப்பும் முகவரி:
DG, NCC West Block&IV,
RK Puram, New Delhi - 110066
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.01.2014
இணையதள முகவரி : http://joinindianarmy.nic.in/
No comments:
Post a Comment