Translate

Sunday, 29 December 2013

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

என்.எல்.சி., என்று அனைவராலும் அறியப்படுவதும், தமிழகத்தின் மிக முக்கிய ஒரு அடையாளமாகவும் திகழும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் இன்ஜினியரிங் சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்கள் மெக்கானிகலில் 27, எலக்ட்ரிகலில் 21, மைனிங்கில் 10, கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 9, சிவிலில் 8, கம்ப்யூட்டரில் 3 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 78 ஆக நிரப்பப்பட உள்ளது.
தகுதி : தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு அல்லது இதே பிரிவுகளில் ஏ.எம்.ஐ.இ., படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த இடங்களுக்காக நடத்தப்படும் கேட் (GATE) தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
வயது : 01.12.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : கேட் தேர்வு பதிவு எண்ணுடன் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2014
இணையதள முகவரி : http://www.nlcindia.com/careers/Advt.No

No comments:

Post a Comment