பேஸ்புக், டுவிட்டரில் ஆர்வம் காட்டும் நோர்வூட் பொலிஸ்
ஐக்கிய அமெரிக்காவின வடகிழக்கு மாநிலமான மாசச்சூசெட்ஸின் நோர்வூட் நகர பொலிஸார் உத்தியோகபூர்வமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கமைய நோர்வூட் பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கென தனியான பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்களினூடாகவே குற்றவாளிகளை இனங்காணுவதாகவும் பொதுமக்களுக்கு சிநேகபூர்வமான சேவையை வழங்குவதற்கு இது வழிசமைப்பதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல் அறிவித்தல், போக்குவரத்து நடைமுறைகளை தெளிவுபடுத்தல், பொலிஸ் சட்ட விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களை நீக்குதல் உட்பட பல்வேறு சேவைகள் சமூக வலைத்தளங்களினூடாக வழங்கப்பட்டு வருகின்றன.
நோர்வூட் நகரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுடன் தொடர்புடையோரில் 95.9 வீதமான குற்றவாளிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவோரையும் அடையாளம் காண முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment