இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தக்கூடும்
இந்தியாவில் சமீப காலங்களில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி 198.30 மில்லியன் மக்கள் இணையதளம் உபயோகிப்பாளர்களாக இருக்கின்றனர்.
இது முந்தைய காலாண்டைவிட 20 சதவிகித அதிகரிப்பாகும். இதே விகிதத்தில் வளர்ச்சி நிலைமை இருந்தால் 260 மில்லியன் பயன்படுத்துபவர்கள் கொண்ட அமெரிக்காவை இந்தியா விரைவில் முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு கிராமப்புற பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
சென்ற அக்டோபர் இறுதியில் 68 மில்லியன் என்ற இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 72 மில்லியனாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.
மொபைல் தொலைபேசி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களே இங்கு அதிகமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 சதவிகிதம் அலுவலக வேலைக்காக மொபைல் இணையதளங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க மக்களைப் போலில்லாமல் இந்தியாவில் சமூக மற்றும் வலைத்தொடர்புடைய இணையதளப் பயன்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment