Translate

Thursday, 5 December 2013

மனதிலுள்ள கவலையை மறக்கணுமா?

மனதிலுள்ள கவலையை மறக்கணுமா?

கவலை இல்லா மனிதனை பார்ப்பது அரிதான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்கத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு சிலர் தனது வாழ்க்கை முழுவதும் முடிவடைந்து விட்டதாக எண்ணி அதை பற்றியே மேலும் கவலைப்படத்தொடங்குவார்கள். ஒரு சிலரோ அதனை எதிர்கொண்டு கவலைகளை நீக்குவதற்கான வழிகளை மேற்கொள்ளுவார்கள். கவலை அல்லது பதற்றம் என்பது எதைபற்றியோ பயம் கொள்ளும் உணர்விற்கு சமமாகும். பொதுவாக மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த கவலை மற்றும் பதற்றமும் ஒருவரை தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக குழப்பமான மனநிலை, பயம், எதை நினைத்தாவது குழப்பமடைவது போன்றவைகள் ஏற்படுத்தும்.

கவலையும் பதற்றமும் எல்லா மனிதர்களும் வெவ்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்வாகும். இவை காதல், பணம், நண்பர்கள் மற்றும் குடும்பம் முதலியவற்றால் ஏற்படும் உணர்வாகும். கவலைகள் சிறிதாக இருந்தால் உங்கள் மனதையும் உடலையும் பாதிக்காது. தொடர்ந்து நீடிக்கும் கவலைகளும் பதற்றமும் டென்ஷன், மனஅழுத்தம், குமட்டல் போன்ற மன ரீதியான பிரச்சனைகளையும் தலைவலி, உடல் அழுத்தம், தளர்ச்சி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளையும்உண்டாக்கும். சில நேரங்களில், கவலைகளை கட்டுப்படுத்த மருந்துகளை உபயோகிக்க வேண்டி இருக்கும். மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உங்களை அதற்கு அடிமையாக்கிவிடும். அதனால், கவலைகளை குறைப்பதற்கு இயற்கையான முறைகளையே தேர்வு செய்யுங்கள். இயற்கை முறையில் கவலைகளை தீர்ப்பதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு முறைகள்

நீங்கள் கவலையுடன் இருப்பதாக உணர்ந்தால் அதில் இருந்து உங்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கான புதிய நம்பகமான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு வழியான ஓய்வு எடுக்கும் முறைகள் இருக்கும். பாட்டு கேட்பது, நீண்ட தூரம் நடைபயணம் செய்வது, குளிப்பது அல்லது விருப்பமான படத்தை பார்ப்பது போன்றவைகள் பயனுள்ளவைகளாக நிரூபிக்கப்ப சில வழிகளாகும். உங்கள் கவலைகளை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒரு வழியை முயற்சி செய்யலாம். உங்கள் மனஅழுத்தத்தில் இருந்து உங்கள் மனதை திசைதிருப்பி புத்துணர்வு ஏற்படுத்தும்.

யோகா மூச்சுப்பயிற்சி

நீங்கள் எதைப்பற்றியாவது கவலை கொண்டிருந்தாலோ எதைப்பற்றியாவது அதிருப்தி அடைந்திருந்தாலோ, அதனால் உங்கள் மனதில் எழும் எதிர்மறையான எண்ணங்களை போக்குவதற்கு யோகா சுவாசப்பயிற்சியை செய்யுங்கள். இந்த கட்டுப்பாடான மூச்சுப்பயிற்சியானது உங்கள் மனதையும் எண்ணங்களையும் கட்டுக்குள் வைக்க உதவும். யோகா மற்றும் யோகா மூச்சுபயிற்சி, இவை இரண்டுமே கவலையை தீர்ப்பதற்கான இயற்கை சிகிச்சை முறைகளாகும். யோகா மூச்சுபயிற்சியை பிராணாயம் என்றும் கூறுவார்கள்.

உடற்பயிற்சி

தீவிரமான உடற்பயிற்சியே கவலையை தீர்க்கும் சிறந்த, ஆரோக்கியமான இயற்கை சிகிச்சை முறையாகும். உடபயிற்சியினால் வெளியாகும் ஹார்மோன்கள் கவலையையும் மனஅழுத்தத்தையும் குறைக்கும். ஒரு நல்ல உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் புத்துணர்வு பெற்று சக்தியை அடைந்து உங்கள் பிரச்சனைகளுக்கு வேறு புதிய வழியில் தீர்வு காண எண்ணுவீர்கள். உடற்பயிற்சியானது உங்கள் வாழ்வில் உள்ள எல்லா கோபங்களையும் வலிகளையும் போக்கும். தீவிர பயிற்சிகளாக கருதப்படுவது உடற்பயிற்சிக் கூடங்கள், எடைபளுக்கள், டிரெட்மில், ஓட்டப்பயிற்சி, நடனப்பயிற்சி போன்றவைகள் ஆகும்.

தியானம்

தினமும் 15 நிமிட தியான பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவி புரியும். இது ஒரு சிறந்த இயற்கை முறையான சிகிச்சையாகும். இது கவலைகளை குறைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி புரியும். உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் சுத்தம் செய்யவும் தியானப்பயிற்சி உதவுகின்றது. நீங்கள் தியானம் செய்தும் போது உங்கள் மனம் உடலோடு சேர்ந்து ஓய்வு எடுக்கும். தொடர்ந்து தியானப்பயிற்சியில் ஈடுபட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கான மூலக்காரணங்களை கண்டறியலாம்.

குறிப்பு

கவலைகளை போக்கும் இந்த இயற்கையான சிகிச்சை முறைகள் நம்மை அடிமையாக்கும் மருந்துகளை காட்டிலும் சிறந்தவைகள் ஆகும். இப்பொழுதுள்ள போட்டிகள், குறிக்கோள்கள், உயர்ந்த உயரத்தை அடைவதற்கான கனவுகள் போன்றவற்றால் இன்று மக்கள் பயம், பதற்றம் மற்றும் கவலை இல்லாமல் வாழ்வதற்கு மறந்து விட்டார்கள். கவலைக்கான மூலக்காரணங்கள் தோல்விகள், பணப் பிரச்சனைகள், உறவுகளின் பிரச்சனை, குடும்பப் பிரச்சனைகள் போன்றவைகளாகும். வாழ்வில் உள்ள எதிர்பார்ப்புகளும் ஒரு காரணம் ஆகும். ஆகவே வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டால் எதிர்காலத்தை பற்றி வருத்தப்படத் தேவையில்லை.

No comments:

Post a Comment