அமேஸ் புண்ணியத்தில் ஹோண்டா விற்பனை அமோகம்!!
அமேஸ் காரின் விற்பனை இந்திய மார்க்கெட்டில் ஹோண்டாவுக்கு மிகப்பெரிய எழுச்சியை தந்துள்ளது. கடந்த மாதம் ஹோண்டாவின் விற்பனை 151 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் 3,711 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 9,332 கார்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த மாதம் 7,598 அமேஸ் கார்களையும், 1,712 பிரியோ கார்களையும், 22 சிஆர்வி எஸ்யூவிகளையும் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. புதிய மாடல் வருகையால் சிட்டி கார் விற்பனை தற்போது இல்லை. புதிய சிட்டி கார் வந்தபின் ஹோண்டாவின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான விற்பனையும் கிட்டத்தட்ட 70 சதவீதம் கூடியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 47,236 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா நடப்பாண்டின் இந்த காலக்கட்டத்தில் 80,163 கார்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment