திருமண வாழ்வின் பிரச்சனைகளை குழந்தை பெற்றுக் கொள்வதால் தீர்க்க முடியுமா?
ஒரு தந்தையாகவோ அல்லது தாயாகவோ இருப்பதை விட உற்சாகமூட்டும் விஷயம் வேறெதுவும் இல்லை. ஆனால், இது எல்லா தம்பதிகளுக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? மோசமான குடும்ப பிரச்சனைகளின் காரணமாக நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால், இது உங்கள் முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம். உங்களுக்கும், உங்களுடைய துணைக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கு உங்களுடைய குழந்தை தீர்வாக முடியும். உண்மையில் குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் பெருத்த அளவிலான பாஸிட்டிவ் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள். சாதரண தம்பதிகளாக இருப்பவர்களை ஒரு குடும்பமாக மாற்றும் இணைப்பு பாலமாக இருப்பவர்கள் தான் குழந்தைகள்.
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் நமக்கு பல விஷயங்கள் கிடைக்கப் பெறுகிறோம், அதனால் உங்கள் துணையுடனான உறவும் உறுதிப்படுகிறது. குழந்தைகள் உங்கள் துணைவருக்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களையும் மாற்றி விடுவார்கள். இதன் மூலம் உங்கள் துணைவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் மன அழுத்தம் என்ன என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் வீட்டிற்கு சிறப்பை கொண்டு வரும் குழந்தைகள், உங்கள் உறவிலும் சிறந்த பகுதியை கொண்டு வருவார்கள்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் குடும்பத் தகராறுகள் குறையும் என்பதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த மாறுபாட்டுடன் உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியை வரவழையுங்கள். இங்கே குழந்தை பெற்றுக் கொள்வதால் குடும்ப பிரச்சனைகளை களைவதற்கான சில மறைமுக யோசனைகளை கொடுத்துள்ளோம்.
குடும்பத்தின் பிணைப்பை உறுதிப்படுத்துதல்
குடும்பத்தின் பிணைப்பை உறுதிப்படுத்துபவராக உங்கள் குழந்தை இருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்வது குடும்ப தகராறுகளை குறைக்கும். குடும்ப பிரச்சனைகளை சரி செய்ய நினைத்தால் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மற்றும குடும்பத்துடன் அந்த குழந்தை கொண்டிருக்கும் தொடர்பை பலமாக வைத்திருங்கள்.
பொறுப்பை அதிகரித்தல்
உங்களுக்கும், உங்கள் துணைவருக்கும் குழந்தை பிறந்த பின்னர் நீங்கள் குடும்பத்திற்கான பொறுப்புகளை சற்றே அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கும். பெற்றோர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குழந்தைகளின் பங்கு தலையாயது. குழந்தையை பார்த்துக் கொள்வதில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொறுப்பு, உங்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும்.
கவனத்தை திசை திருப்புங்கள்
நாள் முழுவதும் பிஸியாக இருக்க சிறந்த வழிகளில் ஒன்று குழந்தை பெற்றுக் கொள்வது. இதன் மூலம் உங்கள் துணைவருடன் சண்டை போட காரணத்தைத் தேடும் நேரம் பெருமளவு குறைந்து விடும். உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட தயாராகிக் கொண்டு, மண வாழ்வு தொடர்பான பிரச்சனைகளை மூட்டை கட்டுங்கள்.
மென்மையான சூழலை உருவாக்குங்கள்
உங்கள் குழந்தையின் வரவால் நீங்கள் இருக்கும் சூழல் தற்செயலாகவோ அல்லது நோக்கத்துடனோ மென்மையானதாக மாறிவிடும். உங்கள் குழந்தையை தலையிடச் செய்வதன் மூலம் உங்களால் சில மண வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்தல்
நாம் பேசும் உரையாடல்களின் தொணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் குழந்தையின் வருகை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து தான் பேசுவீர்கள். இதன் காரணமாகவே உங்கள் பிரச்சனைகள் சமநிலைக்கு வரவும், மண வாழ்வு பிரச்சனைகள் தீர்க்கப்படவும் வாய்ப்புகள் உருவாகும்.
நீங்களும் குழந்தையாக மாறுங்கள்!
உங்கள் குழந்தையுடன் நேரத்தை கழியுங்கள், உங்களுக்குள் உள்ள குழந்தை தானாக வெளிவரும். இதன் மூலம் உங்கள் மனது கனமாகும் சூழல்கள் குறைந்து, நீங்கள் ஒரு அற்புதமான துணைவராக வலம் வரத் துவங்குவீர்கள்.
பொறுமை அதிகரித்தல்
நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ மண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் அதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக அடிக்கடி கோபப்படும் குணம் இருந்தால், நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கமும் கொள்ள வேண்டாம். குழந்தை உங்களுடைய பொறுமையை அதிகப்படுத்தவும், உங்கள் வாழ்வில் அதனை பிரதிபலிக்கவும் செய்யும்.
மகிழ்ச்சியின் கதவு திறக்கட்டும்
உங்களுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கதவுகளை திறப்பதில் குழந்தை பெரும்பங்கு வகிக்கிறது. மண வாழ்க்கையின் பிரச்சனைகளை தாண்டி மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால், உங்கள் துணையிடம் குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
ஒழுக்கம் மற்றும் கொள்கைகளை பின்பற்றுதல்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்கள் குழந்தை பார்க்கவும், கற்றுக் கொண்டு திரும்பச் செய்யவும் கூடும். அவனுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் இருக்கும் சூழல்களில், நீங்கள் ஒழுக்கத்தையும், கொள்கைகளையும் பின்பற்ற கற்றுக் கொடுக்கும் பொருட்டாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்கள் துணையும் மகிழ்ச்சியடைந்து மண வாழ்வில் இன்பம் பொங்கும்.
சிறந்த மன ரீதியான பலமாக இருந்தல்
மண வாழ்வில் வரும் பெரும்பாலான பிரச்சனைகளை மன ரீதியான சச்சரவுகள் தான். ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் மன ரீதியாக பலம் பெறுவீர்கள். எனவே, உங்கள் குழந்தையின் காரணமாக மண வாழ்வின் பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதுடன், மன ரீதியாகவும் நீங்கள் பலமானவராக விளங்குவீர்கள்
No comments:
Post a Comment