பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் அழைக்கும் பயிற்சியாளர்கள்
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.டி.எல்., நிறுவனம் 1970ல் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்டது. ஆன்டி-டேங்க் கைடடு மிஸைல் வகை ஆயுதங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் முக்கியமானது.
இந்த நிறுவனத்திற்கு தற்சமயம் 2 கிளைகள் ஆந்திராவில் உள்ளன. இந்த நிறுவனத்தில் நிதிப் பிரிவில் 14 நிர்வாகப் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது : பி.டி.எல்., நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 23.12.2013 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் நிதிப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு சார்டர்டு அக்கவுண்டன்சி படிப்பு அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., அல்லது 2 ஆண்டு முது நிலை டிப்ளமோ படிப்பை நிதிப் பிரிவில் முடித்தவர்களும் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூருவிலும் எழுதலாம். முழுமையான விபரங்களை இணையதளத்தில் இருந்து அறிந்து கொண்ட பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.12.2013
விபரங்களை அறிவதற்கான இணையதள முகவரி : http://bdl.ap.nic.in/advt03122013.pdf>
No comments:
Post a Comment