நோக்கியா 502 விலை ரூ. 5739
நோக்கியா ஆஷா 502, விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.5,739. வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மொபைல் போனில் 3 அங்குல அகலத் திரை, க்யூ.வி.ஜி.ஏ. டிஸ்பிளேயுடன் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாணம் 99.55 x 59.50 x 11.10 மிமீ. இதில் இரண்டு சிம் இயக்கம் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத் 3 தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. இதன் ராம் மெமரி 64 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 64 எம்.பி., இதனை எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் பேட்டரி 1,110 mAh திறன் கொண்டது. இதன் மூலம் தொடர்ந்து 13.7 மணி நேரம் பேசலாம். 24 நாட்கள் இதன் மின் சக்தி தங்குகிறது.
ஆறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன், பட்ஜெட் விலையில் இரண்டு சிம் இயக்கம் மற்றும் சிறப்பான வசதியுடன் கூடிய போன் தேடுபவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment