Translate

Sunday, 19 January 2014

பி.எஸ்.என்.எல். சாம்பியன் மொபைல்

பி.எஸ்.என்.எல். சாம்பியன் மொபைல்

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். நிறுவனம் சாம்பியன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை இரண்டும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள். சாம்பியன் எஸ்.எம்.3512 மற்றும் 3513 என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் அதிக பட்ச விலை ரூ. 3225 மற்றும் ரூ. 4,499. இவற்றில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. 3 எம்.பி. திறன் உள்ள கேமரா பின்புறமும், 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் உள்ளது. இரண்டு சிம் இயக்கம் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பதியும் வசதியுடன் எப்.எம். ரேடியோ, வை-பி, புளுடூத், 512 எம்பி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் ஸ்டோரேஜ் மெமரி எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றின் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை பேச முடிகிறது. 3513 போனில் மட்டும் 3ஜி சப்போர்ட் கிடைக்கிறது. கருப்பு வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த மொபைல் போன்கள், தற்போதைக்கு இணைய தளங்கள் மூலம் விற்பனையாகின்றன.
அதி முக்கிய நவீன வசதிகளைக் கொண்டு, குறைவாக விலையிடப்பட்டிருப்பதால், இரண்டாம் மற்றும் மூன்றால் நிலை நகரங்களில் இவை அதிகம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment