மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் அழைக்கிறது
இந்தியன் மிஷின் டூல் இண்டஸ்ட்ரி நிறுவனம் 1992ல் சென்ட்ரல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் எனப்படும் சி.எம்.டி.ஐ., ஆக பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனம் இந்திய உற்பத்தித் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் பணிகளை முக்கியமானதாக செய்து வருகிறது. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் உள்ள டெக்னிகல் அஸிஸ்டெண்ட் டிரெய்னி மற்றும் கிராப்ட்ஸ்மேன் டிரெய்னி பதவியில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது : சி.எம்.டி.ஐ., நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி : டெக்னிகல் அஸிஸ்டெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கிராப்ட்ஸ்மேன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிட்டர், மெஷினிஸ்ட், ஏ.சி., மெக்கானிக். எலக்ட்ரீசியன் ஆகிய ஏதாவது ஒரு டிரேடில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: முதலில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் ரூ.200/-க்கான டி.டி.,யை C.M.T.I., என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்புறம் பெயர் மற்றும் பதிவு எண்ணை மறவாமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தின் நகல், உரிய இணைப்புகள், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். "The Senior Administrative Officer '',CMTI, Tumkur Road, Bangalore 560 022.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.01.2014
இணைய தள முகவரி : http://www.cmti-india.net/
No comments:
Post a Comment