இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவி
நவீனமயமாக்கல், தொழில் நுட்ப மேம்பாடு, கட்டுக்கோப்பான விதிமுறைகள் மற்றும் சிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய விமானப் படை அகில உலக அளவில் பல பெருமைகளைக் கொண்டுள்ளது. இந்தப் படையில் குரூப் 'ஒய்' பிரிவு சார்ந்த ஏர்மேன் பதவிக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.02.1994 முதல் 30.11.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 21க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் ௨ அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மீ., யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகள் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முறையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். President,Central Airmen Selection Board, Post Box No. 11807, New Delhi - 110 010.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 27.01.2014
இணையதள முகவரி: http://indianairforce.nic.in/
No comments:
Post a Comment