Translate

Sunday, 12 January 2014

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் நிறுவனம் செய்ல் என்ற பெயரால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. நமது பொது இரும்புத் தேவைகளுக்காகவும், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவைப்படும் இரும்பு பொருட்களைத் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் புகழ் பெறுகிறது. பொதுத் துறை நிறுவனமான செய்லுக்கு இந்தியாவில் பல இடங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய 4 மகாரத்னா நிறுவனங்களுள் செய்ல் நிறுவனமும் ஒன்று என்பது சிறப்பானதாகும். இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னியில் 2135 இடங்களும், நிர்வாகப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னியில் 60 இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: செய்ல் நிறுவனத்தின் டெக்னிகல் பிரிவில் மெக்கானிகலில் 208, எலக்ட்ரிகலில் 124, மெட்டலர்ஜியில் 178, எலட்ரானிக்ஸில் 40, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 20, கெமிக்கலில் 23, செராமிக்சில் 18, சிவிலில் 14, கம்ப்யூட்டர் சயின்சில் 15, மைனிங்கில் 10 காலியிடங்கள் உள்ளன. அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் எச்.ஆர்.,ரில் 17, நிதியில் 23, மெட்டீரியல்சில் 10, மார்க்கெட்டிங்கில் 10 காலியிடங்கள் உள்ளன. வயது : 01.01.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.1984க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். டெக்னிகல் பதவிகளுக்கு உரிய பிரிவுடன் தொடர்புடைய இதர பிரிவுகளிலும் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்கலாம். எச்.ஆர்., நிதி போன்ற பதவிகளுக்கு சிறப்பு படிப்புகள் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். இவற்றுடன் குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல். எழுத்துத் தேர்வு அகர்தலா, அலகாபாத், பெங்களூரு, பரோடா, பிலாய், போபால், புவனேஷ்வர், பொகாரோ, சண்டிகர், சென்னை, டேராடூன், டில்லி, துர்காபூர், கவுஹாத்தி, ஐதராபாத், ஜெய்பூர், ஜம்மு, கொச்சி, கோல்கட்டா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராஞ்சி, ரூர்கேலா, சேலம், திருச்சி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் சி.ஏ.ஜி., புது டில்லி கிளையின் அக்கவுண்ட் எண். 32286155304ல் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 21.01.2014
இணையதள முகவரி: http://www.sail.co.in/

No comments:

Post a Comment