Translate

Sunday, 12 January 2014

ராணுவத்தில் சட்டம் தொடர்பான பணிகள்

ராணுவத்தில் சட்டம் தொடர்பான பணிகள்

சர்வதேச அளவில் பெயர் பெற்ற நமது இந்திய ராணுவம் அதன் தொழில் நுட்பம், அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் படையின் திறன் ஆகியவற்றிற்காக பெருமை பெருகிறது. நமது நாட்டின் மிக முக்கிய படைகளில் பிரதானமான இந்திய ராணுவத்தில் சட்டம் படித்தவர்களை ஜே.ஏ.ஜி., முறையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் ஆண்களுக்கு 7 இடங்களும், பெண்களுக்கு 3 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
வயது: இந்திய ராணுவத்தின் ஜே.ஏ.ஜி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி: எல்.எல்.பி., படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்வதற்கு தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இதர தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மீ.,யும், பெண் விண்ணப்பதாரர்கள் 152 செ.மீ.,யும் உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட தேர்ச்சி முறை உள்ளது. முதல் கட்டத்தில் குரூப் டெஸ்ட், சைகாலஜிக்கல் டெஸ்ட் மற்றும் நேர்காணல். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் சைகாலஜிக்கல் ஆப்டிடியூட் டெஸ்ட், டாகுமெண்ட் வெரிபிகேஷன் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Directorate General of Recruitment Rtg. JAG Entry , AG's Branch, Army Headquarters, West Block & III, RK Puram, New Delhi - 110 066
விண்ணப்பிக்க இறுதி நாள் : 14.02.2014
இணையதள முகவரி: http://joinindianarmy.nic.in/

No comments:

Post a Comment