Translate

Sunday, 2 February 2014

நோக்கியா 208

நோக்கியா 208

இரண்டு சிம் பயன்பாட்டுடன், அனைவரும் வாங்கும் விலையில், சிறப்பான பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது நோக்கியா 208. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 114.2 x 50.9 x12.8. எடை 89.6 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போன் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட், 1,000 அழைப்புகளைப் பதிவு செய்யக் கூடிய போன் புக், 64 எம்.பி. ராம், 256 எம்.பி. ஸ்டோரெஜ் மெமரி என இதன் சிறப்பம்சங்கள் தொடர்கின்றன.
3ஜி, 4ஜி, வை-பி, ஜி.பி.ஆர்.எஸ்., யு.எஸ்.பி. ஸ்லாட் ஆகியவை கிடைக்கின்றன. 1.3 எம்பி திறனுள்ள கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவும் இயக்கமும் உண்டு. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ சிறப்பாக இயங்குகிறது. இதிலும் பதிவு வசதி உண்டு. எம்பி 3 பிளேயர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வசதிகள் தரப்பட்டுள்ளன.இதன் லித்திய அயன் பேட்டரி 1,020 mAh திறன் கொண்டது. 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 490 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,899.

No comments:

Post a Comment