வீட்டு வசதி நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்கள்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ரெப்கோ வங்கியை நாம் அனைவருமே அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தமிழகத்தின் சென்னையில் உள்ளது மற்றொரு சிறப்பாகும். தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது : 01.03.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவர்களின் தகுதியைப் பொறுத்து அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் வரை விலக்கு பெற முடியும்.
கல்வித் தகுதி: முழு நேரப் படிப்பாக 3 வருட பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். பி.காம்., பட்டதாரிகளுக்கு முன்னுரிமை உள்ளது. இந்த காலியிடங்கள் தமிழ் நாடு, கர்னாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளதால் தமிழ், கன்னடம் அல்லது தெலுங்கு மொழியறிவு தேவைப்படும். ஆங்கிலத்தில் நல்ல வளமும், திறனும் பெற்றிருப்பது தேவைப்படும்.
ஸ்டைபண்டு: முதலில் மாதம் ரூ.6 ஆயிரம் ஸ்டைபண்டுடன் பணி புரிய வேண்டியிருக்கும். இதன் பின்னர் நிறுவன விதிகளுக்கு ஏற்றபடி இந்தத் தொகை மாறுபடும்.
முக்கிய தகவல்: முதலில் ஒரு வருட கால அடிப்படையில் பயிற்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், தனி நபர் திறனைப் பொறுத்து நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager (HR) ,Repco Home Finance Limited,3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 34 Sardar Patel Road, Guindy, Chennai - 600 032
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.03.2014
இணையதள முகவரி: www.repcohome.com/ Trainee CENTRALIZEDFEB2014.pdf <http://www.repcohome.com/ Trainee CENTRALIZEDFEB2014.pdf>
No comments:
Post a Comment