இந்திய விமானப் படையில் குறுகிய கால பணியிடங்கள்
இந்திய விமானப் படை சர்வ தேச அளவில் நவீனமயமாக்கலுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வீரர்களுக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் படை இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் படைகளில் தவிர்க்க முடியாத இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் உள்ள 30 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது: 01.01.2014 அடிப்படையில் 20 முதல் 25 வயது உடையவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1990 முதல் 01.01.1995க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டப் படிப்பு அளவில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களாகப் படித்து இவற்றில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஏதாவது ஒரு அறிவியல் புலம், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, மெட்டீயோராலஜி, எக்காலஜி அண்டு என்விரான்மென்ட், ஜியோ-பிஸிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முது நிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இதர தேவைகள்: இந்தப் பதவிக்கு குறைந்த பட்ச உடல் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆண்களாக இருந்தால் 157.5 செ.மீ.,யும், பெண்களாக இருந்தால் 152 செ.மீ.,யும் உயரம் பெற்றிருப்பதுடன் இதற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு இன்டலிஜென்ஸ் டெஸ்ட், நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
Post Bag No. 001, Nirman Bhawan Post Office, New Delhi- 110106
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.03.2014
இணையதள முகவரி: http://indianairforce.nic.iin/
No comments:
Post a Comment