Translate

Sunday, 2 February 2014

வருமான வரித்துறை பணி வாய்ப்பு

வருமான வரித்துறை பணி வாய்ப்பு

வருமான வரித்துறை இந்தியாவின் அனைத்து தொழில்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது வருமானத்துக்கு ஏற்றபடி வருமான வரியை செலுத்துவது சட்டப்படியான தேவையாக உள்ளது. இந்த அலுவலகத்தின் சார்பாக சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் விளையாட்டுத் துறை வீரர்களுக்கான 2013--14ஆம் ஆண்டிற்கான சிறப்பு பணி நியமனங்களை செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பணியிடங்கள்: இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸில் 2 இடங்கள், டாக்ஸ் அசிஸ்டன்ட் பிரிவில் 20 இடங்கள்
வயது: 18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு
தேர்ச்சி முறை: செலக்சன் டிரையல்ஸ் என்னும் திறனறிவு போட்டிகள் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Income-Tax Department,
Office Of The Chief Commissioner Of
Income-Tax-I,
Aayakar Bhawan,
121, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai-34
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.02.2014
இணையதள முகவரி: incometaxindia.gov.in/archive/BreakingNews_SportsQuota_Chennai_22012014.pdf

No comments:

Post a Comment