கடலோர காவல்படையில் டெக்னிகல் பணிகள்
நமது நாட்டில் கடலோர எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியக் கடலோரக் காவல் படை மேற்கொண்டுள்ளது. அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளுக்காக இந்தப் படை அனைவராலும் அறியப்படுகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவிலுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.1992 முதல் 31.07.1996க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிகல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு கூடுதல் தேவையாக இருக்கும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை. சென்னை ராயபுரத்திலுள்ள மையத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.02.2014
இணையதள முகவரி: www.joinindiancoastguard.gov.in.
No comments:
Post a Comment