Translate

Wednesday, 5 February 2014

இந்தியாவில் இன்று வெளியான மோட்டோ ஜி...!

இந்தியாவில் இன்று வெளியான மோட்டோ ஜி...!

இன்றைக்கு பல சிறப்பம்சங்களுடன் கூடிய மோட்டோ ஜி(Moto G) மொபைலானது இந்தியாவில் வெளியிட்டுள்ளது மோட்டோரோலோ சென்ற லினோவா நிறுவனம் மோட்டோரோலாவை கூகுளிடம் இருந்து வாங்கியது நினைவிருக்கலாம்.

4.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் ஐ போன் 5S ஸ்கிரினை விட அதிக கிளாரிட்டி திறன் கொண்டது மேலும் இதில் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராஸஸர் உள்ளது.

இந்த பிராஸஸர் மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும்.

அதோடு இதில் 1GB ரேம், 5MP க்கு கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தும் இதில் கிடைக்கிறது.

இது அனைத்தையும் விட இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் வெளிவருகிறது. இதில் உள்ள இமெஜிங் ஆப்ஸ் நீங்கள் போட்டோ எடுக்கும் போதே எந்த மாதிரி இருக்க வேண்டும் என ஆப்ஷன் கொடுக்கிறது.

மேலும், இந்த மொபைலுக்கு மட்டும் பிரதியோகமாக கூகுள் டிரைவில் 50GB க்கு தகவல்களை சேமித்து கொள்ளும் ஆப்ஷனை கூகுள் வழங்குகிறது

இது டூயல் சிம் ஆப்ஷன்ஸூடன் வெளிவருகிறது, மற்றும் 7 வித கலர் கொண்ட பேக் பேன்ல்கள் இந்த மொபைலுடன் கிடைக்கிறது மேலும் இது வாட்டர் ப்ரூப் மொபைல் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சம்..

மேலும் இந்த மொபைல் 16GB க்கு இன்டர்நெல் மெமரியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மொபைல் இதன் விலைகள் 8GB இன்டர்நெல் மெமரி எனில் அதன் விலை ரூ.12,999 எனவும் அதே 16GB இன்டர்நெல் மெமரி எனில் ரூ.14,499 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது மோட்டோரோலா.

No comments:

Post a Comment