Translate

Wednesday, 5 February 2014

கருச்சிதைவிற்குப் பின் கருத்தரிப்பது பற்றிய சில தகவல்கள்!

கருச்சிதைவிற்குப் பின் கருத்தரிப்பது பற்றிய சில தகவல்கள்!

பொதுவாக கருச்சிதைவுக்கு பின் கருத்தரிப்புத் திறன் மேம்படும். கருச்சிதைவு ஏற்பட்ட பின், சில மாதங்களுக்கு கருத்தரிப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிது மாதங்களுக்கு பின் கருத்தரிப்புத் திறன் இயல்பான நிலைக்கு மாறும்.

கருச்சிதைவுக்கான காரணங்கள் பல நேரங்களில் தெரியாமலே போகும். பொதுவாக கருவுற்ற முதல் 12 வாரத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு மரபுத்திரி இயல்பு மாற்றங்களே காரணமாக விளங்குகிறது. ஆனால் கருச்சிதைவுக்கான குறிப்பிட்ட காரணம் என்னவென்று தெரிவதில்லை. ஆனால் அதற்காக பெண்களால் நல்லபடியாக பிரசவிக்க முடியாமல் போவதில்லை.

இருப்பினும் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு பாதிக்கும் வகையில் வேறு சில உடல் நல பிரச்சனைகள் இருந்தால், அதனாலும் கூட கருச்சிதைவு ஏற்படும்.

மறுமுறை கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்:

ஒரு முறை ஏற்பட்ட கருச்சிதைவு வருங்காலத்தில் நடக்க உள்ளதை கணிக்க உதவாது என்பதை வல்லுனர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான பெண்களில், 85 சதவீத பேர்கள் அடுத்த முறை இயல்பாகவே கருத்தரிப்பார்கள். பெண்ணின் வயது 35-க்கு குறையாக இருந்து, இரண்டு கருச்சிதைவுக்கு மேல் நடக்கவில்லை என்றால், அடுத்த முறை கருத்தரிப்பதில் அதிக இடர்பாடு இருப்பதில்லை.

சீக்கிரமாக நடந்த கருச்சிதைவுக்கு பின் கருவுறுதல்:

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, சில மாதங்களுக்கு கருத்தரிப்புத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறும் போதும், அது நீண்ட காலங்களுக்கு நீடிப்பதில்லை. கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, 4-6 வாரங்களில் கருமுட்டை வெளிப்பட தொடங்கி, இந்த சுழற்சி மீண்டும் இயல்பாக நடக்கத் தொடங்கையில், இயல்பான கருத்தரிப்புத் திறனை அடைவாள் பெண்.

மீண்டும் முயற்சிப்பதற்கான நேரம்:

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, அப்பெண்ணின் மருத்துவ வரலாறு மற்றும் தற்போதைய உடல்நலத்தை மதிப்பிட்டு, அவள் உடல் குழந்தையை சுமக்கும் நிலையை அடைந்து விட்டதா என்பதை கண்டறிய வேண்டும். சில பெண்களின் உடல் 4-6 வாரங்களில் தயாராகி விடும். இன்னும் சிலருக்கோ 6 மாதங்கள் வரை ஆகலாம்.

கருத்தரிப்புத் திறனை அதிகரிக்கும் வழிகள்:

கருச்சிதைவுக்கு பின் மீண்டும் குழந்தை பெற்று கொள்ளும் தீர்மானத்தை தம்பதிகள் எடுத்து விட்டால், சிலவற்றை கடைப்பிடித்தால் கர்ப்பமாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை நிறுத்த வேண்டியது. புகைப்பிடித்தல், போதை வஸ்த்துக்களை பயன்படுத்தல் அல்லது மதுபானம் குடித்தல் போன்றவைகள் இதில் அடக்கம். அளவுக்கு அதிகமாக கஃப்பைனை உட்கொண்டால், கருத்தரிப்புத் திறன் குறையும். அதனால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமாக உண்ணுங்கள் - கருச்சிதைவினால் அப்பெண்ணுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு பசியின்மை உண்டாகும் அல்லது குறைவாக உண்ணுவார்கள் அல்லது துயரத்தோடு உண்ணுவார்கள் அல்லது அதிகமாக உண்ணுவார்கள். இந்நேரத்தில் நீங்கள் உண்ணும் உளவில் கவனம் தேவை. மேலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மருத்துவரிடம் பேசுங்கள்:

கர்ப்பமான ஆரம்ப காலத்திலேயே கருச்சிதைவு ஏற்பட்டு, மீண்டும் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு பல தீர்வுகள் உள்ளது. முதலில் கணவன் மனைவி என இருவருக்குமே கருவள அளவு சோதனை மேற்கொள்ளப்படும். உங்களுக்கு மருத்துவரை அணுக வேண்டாம் என்று தோன்றினால், வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய 'பெர்டெல்' என்ற கருவியை வாங்கிக் கொள்ளுங்கள். $100-க்கு விற்கப்படும் இந்த சோதனை கருவி, ஆண் மற்றும் பெண்ணின் கருவள அளவை அளந்துவிடும்.

கருச்சிதைவுக்கு பின் கருத்தரிப்புத் திறன் போய் விட்டால், நீண்ட நாட்களுக்கு பின்பற்ற, கருவளம் மாத்திரைகள் அல்லது தெரப்பிகள் பரிந்துரைக்கப்படும்.

கடைசியாக:

பொதுவாக கருச்சிதைவுக்கு பின் கருவளம் குறைவதில்லை. ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி திரும்பியவுடன், அவளின் கருவள அளவும் இயல்பு நிலைக்கு திரும்பும். சில நேரம் மன ரீதியான உணர்சிகளால் கருவளம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் உடல் மற்றும் மன ரீதியாக தம்பதிகள் தயாராக இருந்தால், கருத்தரிக்க எந்த ஒரு தடையும் இருப்பதில்லை.

No comments:

Post a Comment