Translate

Friday, 7 February 2014

உங்களது போட்டோக்களை அழகாக்க...!

உங்களது போட்டோக்களை அழகாக்க...!

தற்போது நமக்கு ஜிம்ப் என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும்.

இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை.

பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது.

இதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம்.

இமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை.

இந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது.

இப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

ஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது.

நாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment