டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட்.... கொஞ்சம் பெருசு... கொஞ்சம் புதுசு!!
டிவிஎஸ் ஸ்கூட்டி... பல யுவதிகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஸ்கூட்டர் மாடல். அடக்கமான டிசைன், சரியான உயரத்திலான இருக்கை அமைப்பு போன்றவை இந்த ஸ்கூட்டரை யுவதிகள் விரும்புவதற்கு முக்கிய காரணங்கள்.
இதனாலேயே ஸ்கூட்டி பிராண்டுக்கு மார்க்கெட்டில் தனி மதிப்பு இருந்து வருகிறது. இதனை தக்க வைக்கும் விதமாக அவ்வப்போது ஸ்கூட்டியை மேம்படுத்தி, கூடுதல் வசதிகளுடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், முதல்முறையாக அதிக பவர் கொண்ட 110சிசி எஞ்சினுடன், வடிவத்திலும் கொஞ்சம் பெரியதான ஸ்கூட்டி மாடலை டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கூட்டி ஸெஸ்ட் என்ற பெயரிலான இந்த புதிய ஸ்கூட்டர் ஹெட்லைட், டெயில் லைட் டிசைன் மாறியிருக்கின்றன. கால் வைப்பதற்கான ஃபுட் போர்டும் கொஞ்சம் பெரிதாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 109.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எஞ்சின் 8 எச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
இந்த புதிய ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.
No comments:
Post a Comment