செவிலியர்களுக்கான சிறப்பு பயிற்சி
தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் நம்மால் சி.எம்.சி., என்ற பெயரில் அறியப்படுகிறது. வளர்ந்து வரும் மருத்துவத் துறையின் அனைத்து வசதிகளையும் அவ்வப்போது தன்னகத்தே பெற்று சிகிச்சைக்காக இந்த மருத்துவமனை மற்றும் கல்லூரி பல மைல்கற்களைத் தொட்டு இன்னமும் சேவை செய்து வருகிறது.
இந்த பெருமைமிக்க கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் செவிலியர் களுக்கான மூன்று மாத "காம்பீடன்சி பேஸ்டு டிரெய்னிங்" கிற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : நர்சிங் பிரிவில் பி.எஸ்.சி., பட்டப் படிப்பு அல்லது இதே பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். நிறுவனம் பற்றிய அறிமுகம், பாலிசீஸ் அண்டு புரோடோகால், சாப்ட் ஸ்கில்ஸ், பேரிடர் மேலாண்மை, மருந்துகள், நர்சிங்கிற்கான அடிப்படைப் பயிற்சிகள் போன்ற பகுதிகளில் பயிற்சி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஸ்டைபண்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டா படிவத்தைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Directorate. Christian Medical College, Vellore - 632004, Tel : 0416- 2282010, 3072010, Fax: 0416-2232054
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.02.2014
இணையதள முகவரி : www.cmch-vellore.edu/static/jobs/cbt.html
No comments:
Post a Comment