Translate

Monday, 10 February 2014

டெக்னீசியன் பயிற்சியாளர் பணிவாய்ப்பு

டெக்னீசியன் பயிற்சியாளர் பணிவாய்ப்பு

நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி., கல்வி நிறுவனம் உயர் கல்வித் துறையில் முன்னணி நிறுவனம் என்பதை அறிவோம். முன்னர் ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டு பின்னர் பெயர் மாற்றம் பெற்றது. இந்த கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவர்களுக்கு டெக்னீசியன் டிரெய்னி என்ற பெயரில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி: மெஷினிஸ்ட், டர்னர், கார்பென்டர், எலக்ட்ரீசியன், மோல்டர் மற்றும் பிட்டர் பிரிவுகளில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இந்தப் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டைபண்டு: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் ஸ்டைபண்டுடன் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Head of the Department ,Production Engineering Department, National Institute of Technology, Tiruchirappalli - 620 015
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.02.2014
இணையதள முகவரி: www.nitt.edu/home/

No comments:

Post a Comment