ஆசிரியர் ஆகலாமா
தமிழகத்தின் புவியியல் எல்கைக்குள் பெரும்பாலும் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசின் சார்பாக அங்குள்ள பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 3, அறிவியலில் 5, பிரஞ்ச் மொழியில் 1, பிரஞ்ச் மொழியறிந்த கணிதம் பிரிவில் 1, மலையாளம் பிரிவில் 4, சமூக அறிவியல் பிரிவில் 1 மற்றும் அரேபிய மொழிப் பிரிவிலும் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 14.02.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் பட்டப் படிப்புடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்றவராக இருக்க வேண்டும். அறிவியல் பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி செய்யப்படும் முறை: ஒட்டு மொத்த மதிப்பெண்களை 100 என்று வைத்து இதில் கல்வித் தகுதிக்கு 85 சதவிகித மதிப்பெண்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 15 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பெற்று, அதனை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
Director, Directorate of School Education, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry 605 005.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 14.02.2014
இணையதள முகவரி : www.py.gov.in/portalapp/home.html
No comments:
Post a Comment