Huawei Ascend P7 ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படம் வெளியீடு
விரைவில் Huawei நிறுவனம் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ள Ascend P7 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core 1.6GHz HiSilicon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றும் 16GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,460 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசியானது அடுத்த வாரம் இடம்பெறவுள்ள 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment