ஏப்ரல் 1 முதல் ஹோண்டா கார் விலை உயர்கிறது: உடனே முன்பதிவு செய்துவிடுங்கள்
வரும் 1ந் தேதி முதல் புதிய சிட்டி கார் உள்பட அனைத்து ஹோண்டா கார்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
ஹோண்டா கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் ஞானேஸ்வர் சென் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எந்த கார் மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்த கணக்கீடுகளை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு பின் பல்வேறு நிறுவனங்களும் கார் விலையை குறைத்தன. இந்த நிலையில், ஹோண்டாவின் அறிவிப்பை பின்பற்றி பிற கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் உடனடியாக புக்கிங் செய்து கொள்வது நல்லது என்று பிரபல டீலரை சேர்ந்த விற்பனைப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment