நோக்கியா 208
இரண்டு சிம் இயக்கத்துடன், பட்ஜெட் விலையில், அண்மையில் அறிமுகமாகியுள்ளது நோக்கியா 208. இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.4,899. இதன் பரிமாணம் 114.2 X 50.9 X 12.8 மிமீ. எடை 89.6 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் முகவரி பிரிவில் ஆயிரம் முகவரிகளைப் பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர். எஸ். மற்றும் எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பிற்காக இயங்குகின்றன. ஒரு சிம் இயக்கத்தில் மட்டும் என்.எப்.சி. தொழில் நுட்பம் கிடைக்கிறது. பதிவு செய்யும் வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 12 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. 490 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது.
No comments:
Post a Comment