அனைவருக்கும் ஸ்மார்ட் போன் - ஆசைப்படும் மொஸில்லா
பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் புகழ் பெற்ற மொஸில்லா நிறுவனம், சீனாவின் சிப் தயாரிக்கும் நிறுவனமான ஸ்ப்ரெட்ரம் நிறுவனத்துடன் இணைந்து, 25 அமெரிக்க டாலர் (ரூ.1,500) விலையில் மொபைல் ஸ்மார்ட் போனுக்கான சிப்செட்டை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில், வசதிகள் கொண்ட மொபைல் போனிலிருந்து, ஸ்மார்ட் போனுக்கு மாறுபவர்களைத் தங்கள் வசம் ஈர்க்க, மொஸில்லா இந்த திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், உயர்விலை ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆறு மொபைல் சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நட்பு நிறுவனங்கள், இந்த மொபைல் போனை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி உள்ளன. SC6821 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிப், ஸ்மார்ட் போனுக்கான சிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிப் செட்டுடன் உருவாக்கப்படும் மொபைல் போன் Flame எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த போன் பலவித மெமரி அளவுகளில் உருவாக்கப்படும். பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1.3ல் இது இயங்கும்.
இணையத்தினை எந்நேரமும் அணுகிப் பயன்படுத்த இந்த போனின் வழியாகத் தொடர்பு கிடைக்கும். மக்கள் அனைவரையும் இணையத்தில் கொண்டுவரவே இந்த போன் இவ்வாறான வடிவமைப்பிலும், குறைந்த விலையிலுமாக உருவாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment