Translate

Wednesday, 5 March 2014

ஐ போன்களுக்கு மட்டும் ஏர்டெல் தரும் 4ஜி...!

ஐ போன்களுக்கு மட்டும் ஏர்டெல் தரும் 4ஜி...!

தற்போது ஏர்டெல்(Airtel) நிறுவனம், பெங்களூரில், தனது 4ஜி இன்டர்நெட் சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே.

இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம்.

ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற வேண்டியதுதான்.

அது சரி, ஏன் ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன்களில் மட்டுமே இது கிடைக்கும் என விசாரித்த போது, இந்த போன்கள் மட்டுமே, 4ஜி தொழில் நுட்ப வசதியினைப் பெறும் வகையிலான கட்டமைப்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தாலும், மொபைல் சாதனங்களுக்கு இந்த சேவை இப்போதுதான் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment